New Users of DEP-SSA Wiki must read section 4 at Account Creation after successful login! For Creation of new account please see the New Account Creation Policy Attention for the DEP-SSA Wiki Registered User! Please don't Post any Irrelevant information to this site. Only Teacher training & educational Material are allowed. Looking forward for your Support

Atomic Structure and Nuclear Energy -Tamil Version

From DEP-SSA WiKi

Jump to: navigation, search


அணு அமைப்பு மற்றும் அணுக்கரு ஆற்றல்

|

பாட ப்பொருள்


நோக்கம்

  • அணு மற்றும் அதன் அமைப்பை தெரிந்து கொள்ளுதல் .
  • அணுகரு இணைவு மற்றும் அணுக்கரு பிளவு இவற்றை பற்றி தெரிந்து கொள்ளுதல் .
  • அணுகரு இணைவு மற்றும் அணுக்கரு பிளவு இவற்றின் மூலம் உருவாகும் ஆற்றல் மற்றும் அதன் பயன்பாட்டை உணரச்செய்தல் .


அறிமுகம் ;

உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் பகுத்தாராய முற்படும்பொழுது கிடைக்கும் கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய துகளே அணு ஆகும் .
வரையறை
அணு என்பது ஒரு தனிமத்தின் , கண்ணுக்கு புலப்படாத மிக நுண்ணிய அளவிலான ஒரு துகளே அணு ஆகும் .இது அத்தனிமத்தின் பண்புகளை பெற்றிருக்கும் .
அணு என்ற சொல் "'ஆட்டாமாஸ் "' என்ற கிரேக்க மொழி சொல்லிலிருந்து வந்தது. முற்காலத்தில் அணுவை பிரிக்கமுடியாது என்ற கருத்தை, அறிவியல் வல்லுனர்கள் தங்கள் நுட்பமான ஆய்வுகளின் மூலம் பொய்யாக்கி பிரிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினர் .
அணுக்களின் இயைபு
அணு மிகச் சிறிய துகள்களாக இருந்தாலும் அவற்றிற்கு உள்ளமைப்பு உள்ளது . அணுக்கள் எலக்ட்ரான் , புரோட்டான் , நியுட்ரான் ஆகிய மூவகை உபதுகள்களால் ஆனது .
அணு அமைப்பு ; அணு அமைப்பு
Get Adobe Flash player

அணுவில்லுள்ள இரு பகுதிகள்

உட்கரு பகுதி, உட்கருவிற்கு வெளியே உள்ள பகுதி

உட்கரு பகுதி-புரோட்டான் , நியுட்ரான் உட்கருவிற்கு வெளியே உள்ள பகுதி- எலக்ட்ரான்

இத்துகள்களின் நிறையானது அணு நிறை அலகால் குறிக்கப்படுகிறது .


அணுவின் பண்புகள்


பண்புகள்
எலக்ட்ரான்
புரோட்டான்
நியுட் ரான்
குறியீடு
e
p
n
மின்சுமை
-1
1
0
நிறை (amu)
0
1.01
1.01
சுமாரான நிறை
0
1
1

அணு மாதிரிகள்

அணு எண்

ஒரு அணுவில் உள்ள புரோட்டான் அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கையே அணு எண் எனப்படும் . இதன் குறியீடு 'Z' எனப்படும் .


நிறை எண்

அணுவில் உள்ள புரோட்டான் மற்றும் நியுட் ரான்களின் எண்ணிக்கையே நிறைஎன் எனப்படும் . இதன் குறியீடு 'A' ஆகும்.


அணுக்கரு ஆற்றல்

அணுக்களில் உள்ள அணுக்கரு மாற்றம் அடையும் பொழுது அணுக்கரு ஆற்றல் வெளிப்படுகிறது. அணுக்கரு ஆற்றல் மின்சார உற்பத்திக்ககும் , பாதுகாப்புத் துறையிலும் பயன்படுகிறது.


அணுக்கரு ஆற்றல் உற்பத்தி

அணுக் கருவானது மிக சக்தி வாய்ந்த அணுக்கரு விசையால் பிணைக்கப்பட்டுள்ளது. அணுக்கரு ஒன்றினை ஏதாவது ஒரு துகள் கொண்டு தாக்கும் பொழுது அணுக்கரு மாறுதல் அடைந்து அணுக்கரு ஆற்றல் வெளிப்படுகிறது. இவ்வினைக்கு அணுக்கரு வினை என்று பெயர். இவ்வினை அணுக்கரு இணைவு மற்றும் அணுக்கரு பிளவு ஆகிய இரு முறைகளில் நடைபெறுகிறது.


அணுக்கரு பிளவு

அணு நிறை அதிகமான அணு ஒன்றின் அணுக்கருவினை இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குறைவான நிறைவுள்ள அணுக்கருக்களாக பிளவுரும் நிகழ்வு அணுக்கரு பிளவு ஆகும்.

|


பயன்கள் ;

அணுக்கரு பிளவின் </nowiki>மூலம் கிடைக்கும் அணுக்கரு ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்தல்.


Click to know about Nuclear reactor in india[1]


அணுக்கரு உலை மற்றும் அதன் உள்கட்டமைப்பு ;

Reactor outer view

அணுக்கரு உலையின் செயல்பாட்டை விளக்கும் படக்காட்சி .

Click to know about Nuclear reactor in india[2]

அணுக்கரு உலையை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்தல் .

Electric energy production


அணுக்கரு பிளவின் </nowiki>மூலம் கிடைக்கும் அணுக்கரு ஆற்றலை பயன்படுத்தி அணுகுண்டு செயல்படுவதற்கான விளக்கம்.

Atom bombworking of atom bombEffect of atom bomb


ஹிரோசிமா நாகசாகி நகரங்களில் அணுகுண்டு பயன்படுத்தப்பட்ட நிகழ்வு மற்றும் அதன் விளைவு பற்றிய படத்தொகுப்பு .


அணுக்கரு பிளவின் நிகழ்வுகளை மனித ஆக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். .தவிர அழிவிற்காக பயன்படுத்த வேண்டாம் என மனித சமுதாயத்திடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது .


அணுக்கரு இணைவு;;

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறை குறைவான அணுக்கருக்களை இணைப்பதன் மூலமாக நிறை அதிகமான அணுக்கரு உண்டாவது அணுக்கரு இணைவு எனப்படும்.

|


அணுக்கரு இணைவு செயல்பாடு பற்றிய படத்தொகுப்பு. ;

பயன்பாடு ;

அணுக்கரு இணைவின் மூலம் சூரியன் மற்றும் விண்மீன்களில் ஆற்றல் உற்பத்தி செய்யபடுகிறது என்பதற்கான படம் .


solar energy
Team Members:
  • S.Kumaresan,BRTE,BRC Olakkur.Viluppuram Dt.
  • K.Sakthivel,BRTE,BRC Poondi.Thiruvallur Dt.
  • N.Jagadeeshkumar,BRTE,BRC Ooty.Nilgiri Dt.
  • P.Muthukumaran,BRTE,BRC Lalapettai.Karur Dt.
  • M.Ragupathi,BRTE,BRC Vellakovil.Erode Dt.
Personal tools
Communication